/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சீனிவாசபுரத்தில் குறைந்த மின்னழுத்தம் நீரின்றி நெற்பயிர்கள் கருகும் அபாயம்
சீனிவாசபுரத்தில் குறைந்த மின்னழுத்தம் நீரின்றி நெற்பயிர்கள் கருகும் அபாயம்
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள பெரும்பாலான மக்களின் தொழில் விவசாயம், பூக்கள் பயிர் செய்வது, கால்நடை வளர்த்தல். இங்குள்ள பென்னலுார்பேட்டை அருகே, ராமலிங்காபுரம் ஊராட்சி, சீனிவாசபுரத்தில், 300 ஏக்கருக்கு அதிகமான வயல்வெளிகளில் விவசாயம் செய்யப்படுகிறது.தற்போது இங்கு நெற்பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளது. கோடை வெயில் கொளுத்தும் நிலையில், இந்த பயிர்களுக்கு தேவைப்படும் நீரை, அப்பகுதி விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் வாயிலாக தண்ணீர் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர்.இப்பகுதியில் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதால், விவசாயத்திற்கு தேவையான நீரை பெற முடியாத நிலை உள்ளது.மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சீனிவாசபுரம் கிராமத்திற்கு சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.