உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குறைந்த மின்னழுத்த பிரச்னை கலெக்டர் தலையீட்டால் தீர்வு

குறைந்த மின்னழுத்த பிரச்னை கலெக்டர் தலையீட்டால் தீர்வு

திருவாலங்காடு:திருவாலங்காடில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு, தினமும் 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில், கடந்த மாதம் கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்தார். அப்போது, அறுவை சிகிச்சை மையம் திறக்கப்படாமல் இருந்தது. மேலும், குறைந்த மின்னழுத்தத்தால் மின்விசிறி இயங்காமல் நோயாளிகள் சிரமப்படுவதை கண்டு அதிருப்தி அடைந்தார்.இப்பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணும்படி, மின்துறை உயரதிகாரிக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, மெயின் லைனில் இருந்து நேரடியாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மின்சப்ளை கொடுக்கும் பணியில் மின்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.அதற்காக, மின்கம்பம் அமைத்து கம்பி வழியாக இணைப்பு கொடுக்கும் பணி நடக்கிறது. இதனால், திருவாலங்காடு சுற்றுவட்டார மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து மின்துறை அதிகாரி கூறுகையில், 'இரண்டு நாட்களாக பணி செய்து வருகிறோம். ஒரு சில நாட்களில், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மின் வினியோகம் வழங்கப்படும். பின், 200 முதல் 230 வோல்ட் மின்சாரம் கிடைக்கும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை