மேலும் செய்திகள்
புதிய ரேஷன் கடை எப்போது திறக்கப்படும்
24-Jun-2025
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே காயலார்மேடு கிராமத்தில் இயங்கி வரும் ரேஷன் கடை, ஒரு மாதமாக முறையாக திறக்கப்படுவதில்லை. அப்படியே திறந்தாலும், 'கருவி வேலை செய்யவில்லை. ரேஷன் பொருட்கள் இருப்பு இல்லை' என, ஊழியர்கள் தெரிவிப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.நேற்று காலை ரேஷன் கடை திறக்கப்படாததால், பொறுமை இழந்த கிராம மக்கள், மாதர்பாக்கம் நெடுஞ்சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், 'விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தனர். அதன்பின், கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
24-Jun-2025