வெற்றி பாலா கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
திருவள்ளூர்:கீழானுாரில் உள்ள வெற்றி பாலா கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.திருவள்ளூர் அடுத்த, கீழானுார் கிராமத்தில் வெற்றி பாலா கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில், ஈஸ்வரர், காமாட்சி அம்பாள், பாலாம்பிகை தேவி, மஹா கணபதி மற்றும் முருகன் ஆகிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இக்கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா, கடந்த 29ம் தேதி சிறப்பு ஹோமத்துடன் துவங்கியது.அதை தொடர்ந்து, கணபதி பூஜை, சுதர்சன ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. இதையடுத்து, நேற்று காலை, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், கீழானுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.