உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கன்னிகைப்பேர் ஏரியில் ஆண் சடலம் மீட்பு

கன்னிகைப்பேர் ஏரியில் ஆண் சடலம் மீட்பு

ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் அடுத்த, கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள ஏரியில், ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பார்த்ததில், 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது தெரிந்தது.பெரியபாளையம் போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இறப்பு தொடர்பாக சந்தேகம் இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் நவீன், பெரியபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்படி, பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை