மேலும் செய்திகள்
ரூ.1.20 கோடி மோசடி மடிப்பாக்கம் நபர் கைது
06-Dec-2024
சோழவரம்:சோழவரம் அடுத்த, ஞாயிறு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன், 57; இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 3.12 ஏக்கர் நிலம், போலி ஆவணங்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக, கடந்த ஆகஸ்ட் மாதம், ஆவடி கமிஷனரக, மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.இம்மனு மீது நிலபிரச்னை தீர்வு பிரிவு ஆய்வாளர் வள்ளி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், மனுதாரரின், 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் பல்வேறு நிலைகளில் போலி ஆவணங்கள் வாயிலாக, விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.இதில், மீஞ்சூர் அடுத்த, நல்லுார் கிராமத்தைச் சேர்ந்த பவுல்சங்கர், 53, என்பவர் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.அதையடுத்து, போலி ஆவணங்கள் தயாரித்து, நில விற்பனையில் ஈடுபட்ட பவுல்சங்கரை நேற்று முன்தினம், மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
06-Dec-2024