உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபருக்கு வலை

பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபருக்கு வலை

திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில் ஒரு அரசு பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியும், ராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஐய்பேடு பகுதி சேர்ந்த நவீன் ,23 என்பவரும் 'இன்ஸ்டாகிராம் ' தொடர்பு ஏற்பட்டு காதலித்து வந்தனர்.கடந்த, 6ம் தேதி நவீன், மாணவியை அழைத்துக் கொண்டு சோளிங்கர் அடுத்த பானாவரம் பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் திருமணம் செய்துக் கொண்டார். மாணவியின் பெற்றோர் திருத்தணி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின்படி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நவீனை தேடி வருகின்றனர். மாணவியை போலீசார் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை