உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏ.டி.எம்., கார்டில் மோசடி ரூ.42,000 திருடியவர் கைது

ஏ.டி.எம்., கார்டில் மோசடி ரூ.42,000 திருடியவர் கைது

பொதட்டூர்பேட்டை:பணம் எடுத்து தருவதாக கூறி, ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.பொதட்டூர்பேட்டை அடுத்த கேசவராஜகுப்பத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 55. இவர், நேற்று காலை பொதட்டூர்பேட்டை இந்தியன் வங்கி ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க சென்றார்.அப்போது, இவருக்கு பணம் எடுத்து தருவதாக கூறி, ஏ.டி.எம்., கார்டை பெற்ற நபர், 'பணம் இல்லை' எனக் கூறி, வேறு ஒரு ஏ.டி.எம்., கார்டை கொடுத்துவிட்டு சென்றார்.சிறிது நேரத்தில் ஏ.டி.எம்., கார்டு மூலமாக, 42,000 ரூபாய் எடுத்ததாக, கிருஷ்ணனின் மொபைல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. இதுகுறித்து பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வங்கி கிளையில் இருந்து, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், ஆந்திர மாநிலம் நகரியைச் சேர்ந்த அருண்குமார் என்கிற ஐஸ் குள்ளன், 32, என்பவரை கைது செய்தனர். மேலும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளாரா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை