மது போதையில் தகராறு சமரசம் பேசியவருக்கு அடி
பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை சிலம்புபாளையம் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் மகன் ஆறுமுகம், 27.இவர், நேற்று முன்தினம் இரவு பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவில் முன், அந்த வழியாக வந்தவர்களிடம், மதுபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ், 23, என்பவர், ஆறுமுகத்தை சமரசம் செய்ய முயன்றார். போதை மயக்கத்தில் இருந்த ஆறுமுகம், ஆத்திரத்தில் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் தேவராஜை தாக்கினார்.இதில் படுகாயமடைந்த தேவராஜை, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பொதட்டூர்பேட்டை போலீசார், ஆறுமுகத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.