உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கார் வாடகைக்கு எடுத்து மோசடி செய்தவர் மீது வழக்கு

கார் வாடகைக்கு எடுத்து மோசடி செய்தவர் மீது வழக்கு

திருவள்ளூர்: நண்பரிடம் காரை வாடகைக்கு எடுத்து மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் காக்களூர் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராஹிம் கமால், 28. பொறியியல் பட்டதாரியான இவருக்கு செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த யோகேஷ், 40 என்பவரிடம் ‘பேஸ்புக்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து யோகேஷ், இப்ராஹிம் கமாலிடம் திருவண்ணாமலை செல்ல வேண்டும் உங்களது காரை கொடுங்கள் வாடகை கொடுத்து விடுவதாக கூறியுள்ளார். இப்ராஹிம் கமால் நம்பிக்கையின் பேரில் கடந்த, 15-ம் தேதி இரவு 9:00 மணியளவில் யோகேஷை வரவழைத்து அவரிடம் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு ஆகியவற்றை வாங்கி கொண்டு காரை கொடுத்துள்ளார். மறுநாள் இரவு இப்ராஹிம் கமால் போன் போட்டு கேட்டபோது, நாளை தருகிறேன் எனக்கூறி உள்ளார். அதன்பின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்துள்ளார். யோகேஷ் கொடுத்த ஆதார் அட்டை முகவரியை விசாரித்த போது அந்த முகவரி போலியானது என்பது தெரிய வந்தது. இதுகுறித்து இப்ராஹிம் கமால் நேற்று கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி