உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரூ.78.63 லட்சம் சல்பர் பவுடர் வாங்கி ஏமாற்றியவர் சிக்கினார்

ரூ.78.63 லட்சம் சல்பர் பவுடர் வாங்கி ஏமாற்றியவர் சிக்கினார்

ஆவடி:அம்பத்துார் தொழிற்பேட்டையில், 'தி ஸ்டாண்டர்டு கெமிக்கல்ஸ்' என்ற பெயரில், 'சல்பர்' ரசாயன பவுடர் உற்பத்தி செய்யும் நிறுவனம் செயல்படுகிறது.சல்பர் பவுடர் என்பது கந்தகத்தின் துாள் வடிவம். மஞ்சள் நிறத்தில் இருக்கும் இது பூஞ்சைக் கொல்லியாகவும், பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுகிறது. நாட்டில் உள்ள பிரபல நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு 'சல்பர்' பவுடர் ஏற்றுமதி செய்யப்படுகிறது.கடந்த 2022ம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலத்தில், ஈஸ்வர் ராம் என்பவர் நடத்தி வரும் 'ஜஸ்நத்ஜி டிரேடர்ஸ்' என்ற நிறுவனத்துடன் வர்த்தக தொடர்பு ஏற்பட்டது. துவக்கத்தில் வாங்கிய ரசாயன பவுடருக்கு, முறையாக பணம் செலுத்தி உள்ளார்.ஆனால், கடந்த 2022 டிசம்பர் முதல் பிப்ரவரி 2023 வரை, 78.63 லட்சம் ரூபாய் மதிப்பிலான 103 டன் 'சல்பர்' பவுடர் வாங்கி கொண்டு, பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளனர். இது குறித்து, நிறுவன மேலாளர் நாராயணன் என்பவர், கடந்த ஆக., 19ம் தேதி, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.இது குறித்து இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் ரேகா தலைமையில், தனிப்படை போலீசார் விசாரித்தனர். இதில், அந்த நிறுவனம் போலி ஜி.எஸ்.டி., எண் மற்றும் 'ஆதார் கார்டு' தயாரித்து, 'சல்பர்' பவுடர் வாங்கி சென்றது தெரிய வந்தது.தொடர் விசாரணையில், ஏமாற்றியது ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வர் ராம், 38, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து அழைத்து வந்த போலீசார், நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை