உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டேங்கர் லாரியில் 1.4 டன் கச்சா எண்ணெய் திருடியவருக்கு வலை

டேங்கர் லாரியில் 1.4 டன் கச்சா எண்ணெய் திருடியவருக்கு வலை

ஊத்துக்கோட்டை;லாரி டேங்கரில் எண்ணெய்க்கு பதில் தண்ணீர் ஊற்றி, கணக்கு காட்டிய லாரி ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர். பெரியபாளையம் அடுத்த ஜெயபுரம் கிராமத்தில், தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, கச்சா எண்ணெயை தரம் பிரிக்கும் பணி நடந்து வருகிறது.சென்னை, ராயபுரத்தில் இருந்து, தனியார் லாரி மூலம் கச்சா எண்ணெய் ஜெயபுரம் எடுத்து வரப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை 44.560 டன் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு, லாரி ஒன்று ஜெயபுரம் வந்தது. அங்கு, எண்ணெயை சோதித்ததில், தண்ணீர் கலந்திருப்பது தெரியவந்தது. 1.420 டன் கச்சா எண்ணெய்க்கு பதில், தண்ணீர் கலந்து லாரி ஓட்டுநர் கணக்கு காட்டியது தெரிந்தது. இதை தொடர்ந்து, ஓட்டுநர் தப்பியோடினார். இது தொடர்பாக, எண்ணெய் தொழிற்சாலை மேலாளர் ஸ்ரீவத்சவா, பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, வழக்குப் பதிந்த போலீசார், விழுப்புரம் மாவட்டம், சரவணபாக்கத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சசிகுமாரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ