மேலும் செய்திகள்
மது போதையில் கீழே விழுந்தவர் சாவு
10-Oct-2026
மப்பேடு: புதுப்பட்டு பகுதியில் வீட்டு மாடியில் கூரை அமைக்கும் போது, தவறி கீழே விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் பிரசாந்த், 36. இவர், இரு மாதங்களாக மப்பேடு அடுத்த புதுப்பட்டு பகுதியில் தங்கி, வீட்டின் மாடியில் கூரை அமைக்கும் பணி மேற்கொண்டு வந்தார். கடந்த 3ம் தேதி புதுப்பட்டு பகுதியில், மணிஷ் அகர்வால் என்பவரது வீட்டின் மாடியில் கூரை அமைக்கும் பணி மேற்காண்டார். அப்போது, எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். படுகாயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மப்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
10-Oct-2026