மேலும் செய்திகள்
பூச்சிக்கொல்லி மருந்து குடித்த முதியவர் பலி
17-Sep-2026
ஊத்துக்கோட்டை: குளியலறையில் வழுக்கி விழுந்த, 46 வயது நபர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எல்லாபுரம் ஒன்றியம், திருநிலை கிராமத்தில் வசித்து வந்தவர் சந்தானம், 46. கடந்த 4ம் தேதி காலை, குளியலறைக்கு சென்றார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும், குளியலறையில் இருந்து வெளியே வராததால், அவரின் மகன் சஞ்சய், 21, சென்று பார்த்துள்ளார். அங்கு, சந்தானம் வழுக்கி விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சந்தானத்தை மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக மஞ்சங்காரணை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று சந்தானம் பரிதமாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
17-Sep-2026