காக்களூர் ஏரியில் தவறி விழுந்தவர் பலி
திருவளளூர்:திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஏரிக்கரையைச் சேர்ந்தவர் தேவராஜ், 32; கூலித்தொழிலாளி. இவர், நேற்று மதியம் காக்களூர் ஏரிக்கரைக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது, கால் தவறி குளத்தில் விழுந்தார். தகவலறிந்த திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.