பைக்கில் இருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு
விடையூர், கடம்பத்துார் ஒன்றியம் விடையூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரி, 70. இவர், கடந்த 28ம் தேதி காலை திருவள்ளூரில் இருந்து விடையூருக்கு பைக்கில் வந்து கொண்டிருந்த போது, சாலையோர மின்கம்பத்தில் மோதினார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.மேல்சிகிச்சைக்காக தண்டலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.