மேலும் செய்திகள்
அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் அபாயம்
07-Dec-2024
பள்ளிப்பட்டு, பள்ளிப்பட்டு அடுத்த, சின்னதம்பிராயன் பட்டடை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன், 55; இவருக்கு, சொந்தமான நிலம், கொசஸ்தலை ஆற்றின் மறுகரையில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை, இவரது நிலத்தில் இருந்து மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வர சென்றார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.அவரது உறவினர்கள் அவரை தேடி, கொசஸ்தலை ஆற்றங்கரைக்கு வந்தனர். அப்போது மாடுகள் மட்டும் ஆற்றின் நடுவே வெள்ளத்தில் நின்று கொண்டிருந்தன. ராமன், கொசஸ்தலை ஆற்றின் கரையில் சடலமாக கிடந்தார்.ஆற்றில் வெள்ளம் அதிகளவில் பாய்ந்து வந்த நிலையில், வெள்ளத்தில் மூழ்கி, ராமன் இறந்திருக்கலாம் என, கருதப்படுகிறது. இது குறித்து பள்ளிப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
07-Dec-2024