உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு 26 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு 26 ஆண்டு சிறை

திருவள்ளூர்:பூந்தமல்லி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வாலிபருக்கு 26 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ், 45. இவர் 2022ம் ஆண்டு கூடப்பாக்கம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று தண்ணீர் கேட்டுள்ளார். வீட்டில் பெற்றோர் வெளியே சென்றிருந்ததால் 16 வயது பள்ளி சிறுமி ஒருவர் தண்ணீர் எடுத்து வர சென்றுள்ளார். அப்போது பின்னால் சென்ற ரமேஷ் வீட்டின் கதவை பூட்டி சிறுமியை கட்டி போட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து ரமேஷ் மீது சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளியே வந்த ரமேஷ் தலைமறைவானார். இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் ரமேஷ்க்கு, 26 ஆண்டுகள் சிறை தண்டனையும் 26,000 ரூபாய் அபராதமும் விதித்து, திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி நேற்று தீர்ப்பளித்து பிடிவாரன்ட் பிறப்பித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை