குப்பை நகராக மாறிவரும் மணவாள நகர் தொற்று நோய் அபாயத்தில் பகுதிவாசிகள்
மணவாள நகர்:கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்டது மணவாள நகர். இங்குள்ள, 15 வார்டுகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இங்கு போதுமான துப்புரவு பணியாளர்கள் மற்றும் குப்பை அள்ளும் வாகனங்கள் இல்லாததால் தினமும் சேகரமாகும் குப்பையை முறையாக அகற்ற முடிவதில்லை.குடியிருப்பு பகுதி மற்றும் காலி மனைகளில் குப்பை தேங்கி வருவதால் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் வெங்கத்துார் ஊராட்சியில் அகற்றப்படும் குப்பையும் திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையோரம் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் வெங்கத்துார் ஊராட்சி மணவாள நகர் பகுதியில் தினமும் சேகரமாகும் குப்பை மற்றும் நெடுஞ்சாலையோரம் மலைபோல் குவிந்து வரும் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.