உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடியில் நாளை மருத்துவ முகாம்

கும்மிடியில் நாளை மருத்துவ முகாம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில், நாளை அரசு சார்பில், சிறப்பு பல் நோக்கு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், கும்மிடிப்பூண்டியில் உள்ள கலைமகள் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நாளை காலை 9:00 மணி முதல் சிறப்பு பல் நோக்கு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாமில், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, நீரிழிவு, இதயம், சிறுநீரகம், இரைப்பை, குடல், எலும்பு, நரம்பியல், தோல், காது, மூக்கு, தொண்டை, மகப்பேறு, பல், கண், மனநலம், உள்ளிட்ட துறை சார்ந்த மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர். முகாமில், ஆயுர்வேதம், சித்தா, யுனானி, யோகா, ஹோமியோபதி தொடர்பான மருத்துவ நிபுணர்களும் பங்கேற்க உள்ளனர். மாற்று திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழும், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டையும், முகாமில் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ