உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பூண்டி ஒன்றியத்தில் மருத்துவ காப்பீட்டு முகாம்

 பூண்டி ஒன்றியத்தில் மருத்துவ காப்பீட்டு முகாம்

திருவள்ளூர்: பூண்டி ஒன்றியத்தில், ஏழு ஊராட்சிகளில் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் முகாம் நடக்கிறது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்தில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகள் வழங்க, இன்று முதல் டிச., 31 வரை, ஏழு ஊராட்சிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது. அதன்படி, திருப்பாச்சூரில் நவ., 13 - 19 வரையும், ராமஞ்சேரியில் நவ., 20 - 26 வரையும், பென்னலுார்பேட்டையில் நவ., 27 - டிச., 3 வரையும், பட்டரைபெரும்புதுாரில் டிச., 4 - 10 வரையும், நெல்வாயில் கிராமத்தில் டிச., 11 - 18 வரையும், பூண்டியில் டிச., 19 - 24 வரை மற்றும் போந்தவாக்கத்தில் டிச., 26 - 31 வரையும் முகாம் நடைபெறும். ஞாயிறு தவிர அனைத்து நாட்களிலும், காலை 9:00 - மாலை 4:00 மணி நடைபெறும். பூண்டி ஒன்றியத்தைச் சேர்ந்த மக்கள், ரேஷன் கார்டு மற்றும் ஆதார் நகலுடன் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி