உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் மெகா பள்ளம்

திருத்தணி மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் மெகா பள்ளம்

திருத்தணி:திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை, கார்த்திகேயன் கோவில் குடியிருப்பு எதிரே, முருகன் மலைக்கோவிலுக்கு வாகனங்கள் செல்வதற்கு மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளன. இந்த வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வாயிலாக பக்தர்கள் முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், மலைப்பாதை நுழைவு வாயிலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, போலீசார், வாகனங்கள் நெடுஞ்சாலையில் மீடியன் அமைத்து சிறிது சுற்றிவந்து மலைப்பாதைக்கு செல்லும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், நெடுஞ்சாலையில் இருந்து மலைப்பாதைக்கு திரும்பும் பகுதியில் மெகா பள்ளம் விழுந்துள்ளன.இந்த பள்ளம் பல மாதங்களாக சீரமைக்காததால், வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து காயத்துடன் சென்றனர். இதையடுத்து, போலீசார் தற்காலிகமாக பள்ளம் அருகே தடுப்பு அமைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் அப்பகுதியில் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ