உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  மனநலம் பாதித்தவர் தீயிட்டு தற்கொலை

 மனநலம் பாதித்தவர் தீயிட்டு தற்கொலை

ஊத்துக்கோட்டை: மனநலம் பாதித்தவர் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொண்டு பரிதாபமாக உயிரிழந்தார். வெங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது ஆரிக்கம்பேடு கிராமம். இங்கு வசித்து வந்தவர் ஆயிரம், 32. இவரது மனைவி ஐஸ்வர்யா, 28. இவர்களுக்கு சஷ்வந்த், 6, என்ற மகன் உள்ளான். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆயிரம் மனநலம் பாதித்த நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மாத்திரை சரியாக சாப்பிடாததால், மனநலம் பாதித்து, மனைவி - மகனை அடிக்கடி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், அதே கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு மகனுடன் ஐஸ்வர்யா சென்றார். கடந்த 21ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நிலையில், ஆயிரம் வீட்டில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீயிட்டு கொண்டார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். வெங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை