உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மனநலம் பாதித்தவர் சாலை விபத்தில் பலி

மனநலம் பாதித்தவர் சாலை விபத்தில் பலி

ஆர்.கே.பேட்டை:மனநலம் பாதித்து, சாலையில் சுற்றி திரிந்தவர், இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பலியானார். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லுாரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 60; மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர், சோளிங்கர் சுற்றுவட்டார பகுதியில் சுற்றி திரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை திருவள்ளூர் மாவட்டம், பத்மாபுரம் அருகே சாலையில் நடந்து சென்ற போது, இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த இருசக்கர வாகன ஓட்டி, சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணையில், விபத்து ஏற்படுத்திய இருசக்கர வாகன ஓட்டி, பத்மாபுரத்தைச் சேர்ந்த ரவி, 45, என தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை