மேலும் செய்திகள்
4 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்
17-Sep-2025
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில், 70,000 ரூபாய் மதிப்புள்ள 50 கிராம் மெத்ஆம்பெட்டமைன் போதை பவுடரை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர். திருவள்ளூர் மணவாளநகர் போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மணவாளநகர் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த இருவரை, சந்தேகத்தின்படி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜாவித், 40 மற்றும் பெங்களூரைச் சேர்ந்த முனிஸ், 38, என தெரிய வந்தது. அவர்களிடம், 50 கிராம் மெத்ஆம்பெட்டமைன் போதை பவுடரை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 70,000 ரூபாய். இதுகுறித்து வழக்கு பதிந்த மணவாளநகர் போலீசார், இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
17-Sep-2025