/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பொங்கலையொட்டி அரவை நிறுத்தம்
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பொங்கலையொட்டி அரவை நிறுத்தம்
திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை திருவாலங்காடில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில், நடப்பாண்டிற்கான கரும்பு அரவை இலக்கு, 2 லட்சம் டன் என, நிர்ணயித்து கடந்த நவம்பரில் அரவை துவங்கி நடந்து வந்தது.இந்நிலையில், பொங்கல் விழாவையொட்டி விவசாயிகளின் கொண்டாட்டத்திற்காக கரும்பு அறுவடை செய்யவில்லை. கரும்பு வரத்து இல்லாததால் ஆலையில் கரும்பு அரவை நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் நிறுத்தப்பட்டது. இதனால் ஆலை வளாகம் கரும்பு வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.இதுகுறித்து, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி கூறுகையில், ''பொங்கல் விழாவையொட்டி ஆலையில் அரவை நிறுத்தப்படுவது வழக்கம். பண்டிகை முடிந்து ஜன., 20ம் தேதி அரவை துவங்க திட்டமிடப்பட்டு உள்ளது,'' என்றார்.