உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாயமான 14 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு

மாயமான 14 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு

கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி, பாலயோகி நகரைச் சேர்ந்த பூபாலன் என்பவரின் மகன் டெண்டுல்கர் குமார், 14. புதுகும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால், மதியத்திற்கு பின் வெளியே விளையாட சென்றார். மாலை வீடு திரும்பாததால், பல இடங்களில் குடும்பத்தினர் தேடி பார்த்தனர்.அதன்பின், கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசில் புகார் அளித்தனர். வழக்கு பதிந்த போலீசார், சிறுவனின் நண்பர்களிடம் விசாரித்தனர். அப்போது, அனைவரும் ஒன்றாக கிணற்றில் குளித்ததும், கிணற்றில் மூழ்கிய சிறுவன் வெளியே வராததால், அவரது நண்பர்கள் பயத்தில், நடந்த விஷயத்தை மறைத்ததும் தெரியவந்தது.சிறுவனின் வீட்டில் இருந்து 1 கி.மீ., தொலைவில், விவசாய நிலத்தில் திறந்தவெளி கிணறு உள்ளது. போலீசார் சென்று பார்த்தபோது, சிறுவன் அணிந்திருந்த உடைகள் இருந்தன.கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு படை வீரர்கள், நள்ளிரவில் கிணற்றில் இறங்கி, இரண்டரை மணிநேர தேடலுக்குப் பின், நேற்று அதிகாலை சிறுவனின் உடலை மீட்டனர். இதுகுறித்து, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை