உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நடமாடும் கால்நடை சிகிச்சை முகாம்

நடமாடும் கால்நடை சிகிச்சை முகாம்

பள்ளிப்பட்டு, திருத்தணி உட்கோட்டத்திற்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு, திருத்தணி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதியில், 23 கால்நடை மருந்தகங்கள், ஆறு கால்நடை கிளை நிலையங்கள் மற்றும் ஒரு பார்வை கால்நடை நிலையம் என, மொத்தம் 30 கால்நடை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில், ‛1962' என்ற நடமாடும் கால்நடை சிகிச்சை வாகனமும் தற்போது செயல்பட்டு வருகிறது. திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் பல்வேறு சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஒன்றியங்களில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் இயங்கி வருகிறது. ஸ்ரீகாளிகாபுரம், ராகவநாயுடுகுப்பம் கிராமங்களில், இந்த வாகனத்தின் வாயிலாக நேற்று முகாம் நடத்தப்பட்டது. இதில், 530 கால்நடைகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று வேணுகோபாலபுரம், காட்டூர் கிராமங்களில் முகாம் நடைபெற உள்ளது.தினமும் இரண்டு கிராமங்களில், காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை முகாம் நடைபெறும் என, திருத்தணி கோட்ட கால்நடை உதவி இயக்குனர் தாமோதரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !