உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நாய் கடித்து குதறியதில் தாய் - மகன் படுகாயம்

நாய் கடித்து குதறியதில் தாய் - மகன் படுகாயம்

திருத்தணி:வீட்டு வாசலில் அமர்ந்திருந்த மூதாட்டியையும், அவரது மகனையும் நாய் கடித்து குதறியது. படுகாயமடைந்த இருவரும், திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருத்தணி நகராட்சியில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று நாய்கள் கடிக்கின்றன. திருத்தணி, சுப்பிரமணிய நகரில் உள்ள கம்பர் தெருவில் வசிக்கும் பச்சையம்மாள், 90, என்ற மூதாட்டி, நேற்று காலை வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது, திடீரென ஓடி வந்த தெருநாய் ஒன்று, பச்சையம்மாளின் கை, கால், முகம், வயிறு என, 20க்கும் மேற்பட்ட இடங்களில் கடித் தது. அவரது அலறல் சத்தம் கேட்டு, வீட்டிற்குள் இருந்த அவரது மகன் சேகர், 45, நாயை துரத்த முயன்றார். அவரின் கை, கால்களையும் நாய் கடித்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் நாயை துரத்தினர். பின், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சேகர் உள்நோயாளிகள் பிரிவிலும், அவரது தாய் பச்சையம்மாள் அவசர சிகிச்சை பிரிவிலும் சேர்க்கப்பட்டனர். பச்சையம்மாள் உடலில் பல இடங்களில் நாய் கடித்ததால், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !