லாரி மோதி விபத்து: தாய் - மகன் படுகாயம்
திருவாலங்காடு: திருவாலங்காடு அருகே லாரி மோதியதில் மொபட்டில் சென்ற தாய் மகன் படுகாயமடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மோசூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி சித்ரா, 36. நேற்று முன்தினம் சித்ரா, மகன் தர்ஷனுடன், 18, புளியங்குண்டா கிராமத்தில் இருந்து ஸ்கூட்டரில் அரக்கோணம் நோக்கி திருவாலங்காடு -- கனகம்மாசத்திரம் கூட்டுச்சாலை அருகே வந்தார். அப்போது, எதிரே வந்த லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், சித்ரா மற்றும் தர்ஷன் இருவரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், மேல்சிகிச்சைக்காக இருவரும், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.