தாய் இறந்த சோகம் மகன் தற்கொலை
ஊத்துக்கோட்டை:தாமரைப்பாக்கம் அடுத்த கோடுவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார், 44. கொருக்குப்பேட்டை நீரேற்று நிலையத்தில் பணியாற்றி வந்தார். இரு தினங்களுக்கு முன் இவரது தாய் வயது மூப்பு காரணமாக இறந்து விட்டார். துக்கம் தாளாது இருந்த சசிகுமார் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வெங்கல் போலீசார், விசாரித்து வருகின்றனர்.