மேலும் செய்திகள்
அரிசந்திராபுரம் சாலையில் குப்பையால் துர்நாற்றம்
29-Sep-2024
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், வியாசபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது கணேசபுரம் கிராமம். இங்கு 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கணேசபுரம் --- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையை இணைக்கும் தார்ச்சாலை, 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இச்சாலையை சக்கரமநல்லூர், சின்னம்மாபேட்டை, தொழுதாவூர், பட்டாபிராமபுரம், கணேசபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் அரக்கோணம் செல்ல பயன்படுத்தி வந்தனர். 3 ஆண்டுகளுக்கு முன் இச்சாலை முழுதும் சேதமடைந்தது. எனவே இந்த தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கிராமசாலைகள் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் 2 கி.மீட்டர் நீளத்திற்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டு பணி துவங்கியது. ஓராண்டுக்கு முன் ஜல்லி கொட்டப்பட்ட நிலையில் பின் பணி நடைப்பெறாமல் கிடப்பில் போடப்பட்டது.ஓராண்டாக கிடப்பில் போடப்பட்டுள்ள தார்ச்சாலை பணியை விரைந்து முடிக்க திருவள்ளூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
29-Sep-2024