உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் திரியும் கால்நடைகள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

சாலையில் திரியும் கால்நடைகள் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

போளிவாக்கம்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது போளிவாக்கம் ஊராட்சி. இங்கிருந்து வலசைவெட்டிக்காடு, இலுப்பூர், வழியாக பாப்பரம்பாக்கம், மண்ணுார் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.இங்குள்ள நெடுஞ்சாலை வழியே தினமும், 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் நெடுஞ்சாலையிலலேயே சுற்றி திரிகின்றன.இதனால் இவ்வழியே வாகனங்களில் செல்வோர் அவதிப்பட்டு வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலையில் திரியும் கால்நடைகளை பிடித்து கோசாலையில் ஒப்படைத்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை