ஊத்துக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளால் வளைவில் திரும்ப வாகன ஓட்டிகள் அவதி
ஊத்துக்கோட்டை:தமிழக - ஆந்திர எல்லையில் உள்ளது ஊத்துக்கோட்டை பேரூராட்சி. சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம், புத்துார், நகரி, திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சத்தியவேடு, வரதயபாளையம், தடா, சூளூர்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் ஊத்துக்கோட்டை வழியே செல்கின்றன.இதில், ஊத்துக்கோட்டை அண்ணாதுரை சிலை உள்ள பகுதியில் வளைவில் வாகனங்கள் செல்கின்றன. இந்த வளைவில் ஆக்கிரமிப்புகள் இருப்பதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. ஒவ்வொரு நாளும் இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.திருவள்ளூர் நெடுஞ்சாலைத் துறையினர் இந்த இடத்தை அளந்து அகலப்படுத்த முயற்சி மேற்கொண்டனர். ஆனால், கிடப்பில் போடப்பட்டு உள்ளது.எனவே, பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன், ஊத்துக்கோட்டை அண்ணாதுரை சிலை உள்ள பகுதியில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.