உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  சாலை மைய தடுப்புகளில் மாடுகள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

 சாலை மைய தடுப்புகளில் மாடுகள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

சோழவரம்: சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் மைய தடுப்பு பகுதிகளில் புற்கள் வளர்ந்துள்ளன. அந்த புற்களை உண்பதற்காக சாலையின் குறுக்கே வரும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர். சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், சோழவரம் அடுத்த ஆத்துார் மேம்பாலம் பகுதியில் இருந்து, செம்புலிவரம் வரை உள்ள சாலை மைய தடுப்புகளில், புற்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இவற்றை உண்பதற்காக மாடுகள் கூட்டம் கூட்டமாக அங்கு சுற்றித்திரிகின்றன. அவ்வப்போது, திடீரென சாலையின் குறுக்கே திரிகின்றன. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். இதன் காரணமாக, விபத்து அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க, மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க, மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ