உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெடுஞ்சாலையில் மெகா பள்ளங்கள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

நெடுஞ்சாலையில் மெகா பள்ளங்கள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையில், குருவராஜகண்டிகை கிராமத்தில் இருந்து சிறுபுழல்பேட்டை கிராமத்தை இணைக்கும், 4 கி.மீ., சாலை நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பில் உள்ளது. அந்த சாலை வழியாக, குருவராஜகண்டிகை மற்றும் சிறுபுழல்பேட்டை கிராமங்களில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு, தினசரி நுாற்றுக்கணக்கான லாரிகள் வந்து செல்கின்றன.அதிக பாரம் கொண்ட கனரக வாகனங்கள் அதிகளவில் வருவதால், அடிக்கடி சாலை சேதம் அடைகிறது. குறிப்பாக அந்த சாலையில் உள்ள அனைத்து வளைவுகளிலும் மெகா பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.அதை கடக்கும் அதிக பார லாரிகள் ஆபத்தாக தள்ளாடுவதுடன், அடிக்கடி லாரிகளின் அச்சு முறிவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த சாலையை, அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலையில், கனரக வாகன ஓட்டிகள் உள்ளனர். உடனடியாக அந்த சாலை பள்ளங்களை வலுவாக சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்ப்பார்க்கின்றனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ