உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் உலர வைக்கும் நெல் வாகன ஓட்டிகள் அச்சம்

சாலையில் உலர வைக்கும் நெல் வாகன ஓட்டிகள் அச்சம்

ருவாலங்காடு,:திருவாலங்காடு ஒன்றியம் பொன்னாங்குளம், பாகசாலை பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.தற்போது, அறுவடை செய்யப்பட்டு, நிலத்தில் இருந்து டிராக்டர் மூலம் கொண்டு வரும் நெல்களை, உலர வைப்பதற்கு கிராமப் பகுதியில் போதிய இடம் இல்லை. இதனால் பேரம்பாக்கம் - திருவாலங்காடு -நெடுஞ்சாலை பாகசாலை கொசஸ்தலையாற்று தரைப்பாலத்தை ஆக்கிரமித்து நெல் கொட்டி உலர வைக்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.நெல் உலர வைப்பதற்கு கூடுதலாக, நெற்களம் அமைத்து தர கோரி, ஊராட்சி நிர்வாகத்தின் வாயிலாக, மாவட்ட நிர்வாகத்துக்கு, விவசாயிகள் மனு அளித்துள்ளனர். ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ