மேலும் செய்திகள்
செங்குன்றம் சாலை சேதம் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்
22-Oct-2025
திருவள்ளூர்: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை போதிய பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழி சாலையாக விரிவாக்கம் பணிகள், 2018 ம் ஆண்டின் இறுதியில் துவங்கி நடந்து வருகிறது. மாநில நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்பட்ட மதுரவாயல் - திருப்பெரும்புதுார் வரையிலான 23 கி.மீ., சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. ஆனால், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் துவக்கப்பட்ட திருப்பெரும்புதுார் - வாலாஜா இடையே, 71 கி.மீ., சாலை விரிவாக்கப் பணிகள், 2021ல் முடிந்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. ஒரு லட்சத்திற்கும் அதிகமாக வாகனங்கள் சென்று வரும் இந்த நெடுஞ்சாலையில், தற்போது ஆங்காங்கே சாலை சேதமடைந்து, மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக திருமழிசை, குத்தம்பாக்கம், நசரத்பேட்டை, பூந்தமல்லி உட்பட பல இடங்களில் சாலை சேதமடைந்து, ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடப்பதால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். விபத்துக்களுக்கும் வழிவகுக்கும் நிலை உள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில், சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22-Oct-2025