உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அபாய நிலையில் கொசஸ்தலை ஆற்றுப்பாலம் ஆபத்தை உணராத வாகன ஓட்டிகள்

அபாய நிலையில் கொசஸ்தலை ஆற்றுப்பாலம் ஆபத்தை உணராத வாகன ஓட்டிகள்

பள்ளிப்பட்டு, பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆறு, நெடியம் தரைப்பாலத்தை கடந்து பூண்டி நீர்த்தேக்கத்தை அடைகிறது. சில நாட்களாக ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால், ஆற்றில் வெள்ளம் பாய்ந்து வருகிறது.இந்நிலையில், நெடியம் மற்றும் சொரக்காய்பேட்டை இடையே, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் ஆபத்தான நிலையில் உள்ளது. தரைப்பாலம் இதுவரை பல்வேறு கட்டமாக சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. நான்கு ஆண்டுகளாக பாலத்தின் மையப்பகுதியில் மண்ணரிப்பு காரணமாக பாலம் இடிந்தும், மண்ணில் புதைந்தும் கிடக்கிறது.இந்த நிலையிலும், இந்த பாலத்தின் வழியாக இருசக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் டிராக்டர்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தரைப்பாலத்தை தாங்கும் துாண்கள் சில நாட்களாக மேலும் மணலில் புதைந்து வருகின்றன.இதனால், பாலம் தொங்கும் நிலையில் கிடக்கிறது; எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலை உள்ளது. ஆபத்தை உணராத வாகன ஓட்டிகள் தொடர்ந்து இந்த தரைப்பாலத்தின் வழியாக பயணித்து வருகின்றனர்.தரைப்பாலத்தில் போக்குவரத்திற்கு தடை விதித்து, உடனடியாக சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை