உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் ஜல்லி சிதறுவதால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சாலையில் ஜல்லி சிதறுவதால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

திருத்தணி, திருத்தணி ஒன்றியம் சூர்யநகரம் மற்றும் ஆந்திர மாநிலம் நகரி ஆகிய பகுதிகளில் இருந்து டிப்பர் லாரிகள் ஜல்லி கற்கள் ஏற்றிக் கொண்டு திருத்தணி வழியாக திருத்தணி நகரம், அரக்கோணம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களுக்கு செல்கிறது. இந்நிலையில் டிப்பர் லாரியில் குறிப்பிட்ட அளவு ஜல்லிகற்கள் ஏற்றாமல் அதிகளவில் பாரம் ஏற்றிக் கொண்டு, தார்பாய் மூடாமல் வேகமாக சென்று வருகின்றன. இதனால் திருத்தணி நகரத்தில் அதிகளவில் மக்கள் நடமாட்டம் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்லும் வழியில் டிப்பர் லாரியில் ஜல்லிகற்கள் மாநில நெடுஞ்சாலையில் கொட்டியவாறு செல்கின்றனர். ஜல்லிகற்கள் சாலையில் சிதறி கிடப்பதால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து காயம் ஏற்படுகிறது. மேலும், சில நேரங்களில் சாலையில் ஜல்லி கற்கள் மீது ஓட்டும் போது இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் தவறி விழுந்து அவ்வழியாக செல்லும் வாகனத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது.குறிப்பாக திருத்தணியில் சித்துார் சாலை, அரக்கோணம் சாலை, ம.பொ.சி.சாலை மற்றும் பைபாஸ் ரவுண்டான ஆகிய பகுதிகளில், ஜல்லி லாரிகளில் இருந்து ஜல்லி கற்கள் சாலை கொட்டிவாறு செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவர். எனவே மாவட்ட நிர்வாகம் எவ்வித அசம்பாவிதம் நடக்காத முன்பு ஜல்லி கற்கள் கொண்டு செல்லும் லாரியின் உரிமையாளர்களுக்கும், ஓட்டுனர்களும் அறிவுறுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை