உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் கால்நடைகள் உலா வாகன ஓட்டிகள் கடும் அவதி

சாலையில் கால்நடைகள் உலா வாகன ஓட்டிகள் கடும் அவதி

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்தில்ல், திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி, மணவாளநகர் - ஸ்ரீபெரும்புதுார், தண்டலம் - அரக்கோணம் ஆகிய நெடுஞ்சாலைகள் உள்ளன.இந்த நெடுஞ்சாலைகள் வழியாக, தினமும் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. கடம்பத்துார் ஒன்றியத்தில் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் நெடுஞ்சாலையில் சுற்றித்திரிகின்றன.இதனால், வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி கடும் சிரமப்பட்டு வருகின்றனர். சில சமயங்களில் விபத்தில் சிக்கி உயிரிப்பு ஏற்பட்டு வருகிறது.எனவே, மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை