மேலும் செய்திகள்
சாலையில் ேஹாட்டல் கழிவு நீர்
05-Nov-2024
திருவள்ளூர்:அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே கழிவு நீர் அகற்ற வேண்டும் என, நகராட்சி உத்தரவிட்டுள்ளது.திருவள்ளூர் நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. சில வீடுகளில் இன்னும் இணைப்பு வழங்கப்படாததால், கழிவுநீர், தனியார் லாரிகள் வாயிலாக அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தனியார் கழிவுநீர் லாரி ஓட்டுனர்கள், நகராட்சி பகுதியை ஒட்டியுள்ள சேலை, கூவம் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீரை அகற்றி வருகின்றனர். இதனால், அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக, நகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.இதுகுறித்து நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு மற்றும் சுகாதார அலுவலர் மோகன் கூறியதாவது:திருவள்ளூர் நகராட்சி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் கழிவுநீர் அகற்றக் கூடாது. நகராட்சியில் உள்ள கழிவுநீர் அகற்றும் லாரி உரிமையாளர்கள், அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே கழிவுநீரை அகற்ற வேண்டும். மேலும், 6,000 லிட்டர் வரை 200 ரூபாயும், அதற்கு மேல் 300 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். இதை அனைத்து கழிவுநீர் லாரி உரிமையாளர்களும் பின்பற்ற வேண்டும். இல்லையெனில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
05-Nov-2024