உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் முருக்கம்பட்டு நீர்த்தேக்க தொட்டி

பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் முருக்கம்பட்டு நீர்த்தேக்க தொட்டி

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் முருக்கம்பட்டு கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதிமக்களின் குடிநீர் தேவைக்காக, ஊராட்சி நிர்வாகம் 2023 - -24ம் ஆண்டு, 16.75 லட்சம் ரூபாய் மதிப்பில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து அதே ஆண்டில், ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள குளக்கரை பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணி நிறைவடைந்தது. ஒன்றரை ஆண்டாக பயன்பாட்டிற்கு வராமல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வீணாகி வருகிறது.எனவே, மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, புதிதாக கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து திருத்தணி ஒன்றிய அதிகாரி கூறியதாவது:மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றுவதற்காக, ஆழ்துளை கிணறு மற்றும் குழாய் அமைத்து, மின்மோட்டார் வாயிலாக நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்ற வேண்டும். ஆனால், ஊராட்சி நிர்வாகத்தில் போதிய நிதி இல்லாததால், திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ.,விடம் நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி