உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெண்களிடம் நகை பறிக்க முயற்சி மர்ம நபர்களுக்கு வலை

பெண்களிடம் நகை பறிக்க முயற்சி மர்ம நபர்களுக்கு வலை

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் மாமண்டூரை சேர்ந்தவர் வாசுகி, 40. இவர் கனகம்மாசத்திரம் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வருகிறார்.இவரும் சிவாடா அங்கன்வாடி மையத்தில் பணியாற்றும் லதாவும் தோழிகள். இருவரும் நேற்று காலை திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று விட்டு டி.வி.எஸ்., ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில் கனகம்மாசத்திரம் நோக்கி சென்றனர். லதா இருசக்கர வாகனத்தை இயக்கிய நிலையில் வாசுகி பின்னால் அமர்ந்து சென்றார். திருவாலங்காடு ---- கனகம்மாசத்திரம் நெடுஞ்சாலை முத்துக்கொண்டாபுரம் கொசத்தலையாற்று உயர்மட்ட பாலம் பகுதியில் சென்றனர். அப்போது ஹெல்மெட் அணிந்து பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருநபர்களில் பின்னால் அமர்ந்திருந்தவர் வாசுகி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தாலி செயினை பறித்தார். செயின் அதிருஷ்ட வசமாக திருடர்கள் கையில் சிக்காமல் வாசுகி அணிந்திருந்த உடையில் சிக்கிக்கொண்டது.திருடர்கள் பைக்கில் வேகமாக தப்பி சென்றனர். இதுகுறித்து வாசுகி அளித்த புகார்படி வழக்கு பதிந்த கனகம்மாசத்திரம் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி