மேலும் செய்திகள்
ரொட்டி துண்டுகளுக்காக ஓட்டுகளை விற்கக்கூடாது
06-Jul-2025
பொன்னேரி:பொன்னேரியில் நாம் தமிழர் கட்சி மற்றும் ஆதி தமிழர் விடுதலை இயக்கம் சார்பில், வரலாற்று தலைவர்கள் அயோத்திதாசர் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசனார், எம்.சி.ராஜா ஆகியோரின் சேவைகளை சிறப்பிக்கும் வகையில் பொதுக்கூட்டம் நடந்தது.இதில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். மேற்கண்ட வரலாற்று தலைவர்கள் கல்வி, சமூக நீதி என, தமிழ் சமூகத்திற்காகவும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் ஆற்றிய சேவைகள் குறித்து, பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
06-Jul-2025