உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நத்தம் ஊராட்சி செயலர் சிகிச்சை பலனின்றி பலி

நத்தம் ஊராட்சி செயலர் சிகிச்சை பலனின்றி பலி

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் அருகே உள்ள பெரியகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர், 40. இவர், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், நத்தம் ஊராட்சி அலுவலக செயலராக பணிபுரிந்து வந்தார்.இரண்டு மாதங்களுக்கு முன் விபத்து ஒன்றில் காலில் காயம் ஏற்பட்டது. இதனால், பைக் ஓட்ட முடியாத நிலையில், அவரது தம்பி லட்சுமணன், தினமும் அலுவலகத்திற்கு அழைத்து சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.கடந்த 30ம் தேதி சங்கர் அலுவலகத்திற்கு சென்றுவிட்டு, மாலை தம்பியின் 'ஹோண்டா யூனிகார்ன்' பைக்கில் பின் இருக்கையில் அமர்ந்து வீடு திரும்பி கொண்டிருந்தார்.நத்தம் - சுண்ணாம்புகுளம் சாலையில் செல்லும்போது, எதிர் திசையில் அதிவேகமாக வந்த 'பொலிரோ' வேன் மோதியது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில், லட்சுமணன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். தீவிர சிகிச்சையில் இருந்த சங்கர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, ஆரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி