உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நாக சதுர்த்தி விழா: பெண்கள் வழிபாடு

நாக சதுர்த்தி விழா: பெண்கள் வழிபாடு

திருத்தணி: நாக சதுர்த்தி விழாவை ஒட்டி, அம்மன் கோவில்களில் உள்ள புற்றில் முட்டை, பால் ஊற்றி பெண்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர். ஆண்டுதோறும் தீபாவளி நோன்பு விரதம் முடிந்து ஐந்தாம் நாளில், நாக சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை ஒட்டி, திருத்தணி நகரத்தில் உள்ள கங்கையம்மன் கோவில், நல்லதண்ணீர் குளக்கரையில் உள்ள நாகவள்ளி கோவில், தணிகாசலம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் உள்ள புற்றில் முட்டை, பால் ஊற்றி, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து பெண்கள் வழிபட்டனர். அதேபோல், ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள தேசம்மன் கோவில், மாம்பாக்கசத்திரம் முக்கோட்டி அம்மன் உட்பட திருத்தணி தாலுகாவில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களில் நாகசதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. l சின்னம்மாபேட்டை, மணவூர், திருவாலங்காடு, சின்னமண்டலி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட அம்மன் கோவில்களில், நேற்று நாக சதுர்த்தி விழா நடந்தது. மணவூரில் வழித்துணை விநாயகர் கோவிலில் இருந்து பால் குடம் எடுத்து வந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், நாகாத்தம்மனுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர். l அத்திமாஞ்சேரிபேட்டையில் காந்திநகர், பாரதி, சுந்தரேசன் நகர் ஆகிய இடங்களில் உள்ள நாகாலம்மன் கோவில்களில், பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். காலை - மாலை வரை விரதம் இருந்த பெண்கள், கூட்டம் கூட்டமாக நாகாலம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ