உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கோவில் நகரமான சோளிங்கரில் கழிவுநீரால் வாடும் நாரை குளம்

கோவில் நகரமான சோளிங்கரில் கழிவுநீரால் வாடும் நாரை குளம்

சோளிங்கர், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பழமையான சோழபுரீஸ்வரர், பிரசித்தி பெற்ற பக்தோசித பெருமாள் கோவில் உள்ளிட்ட ஏராளமான கோவில்கள் அமைந்துள்ளன.சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட கொண்டபாளையம் கிராமத்தில் யோக நரசிம்மர் மலைக்கோவிலும் உள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு, ரோப்கார் வசதி ஏற்படுத்திய பின், ஓராண்டாக நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.தொலை துாரத்தில் இருந்து வரும் பக்தர்கள், சோளிங்கர் நகரில் உள்ள விடுதிகளில் தங்கி, சோளிங்கர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கோவில்களில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதனால், கோவில் நகரமாக சோளிங்கர் பிரசித்தி பெற்றுள்ளது.இந்நிலையில், சோளிங்கர் கிழக்கு பஜார் வீதியில், பழமையான நாரை குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. சோளிங்கர் நகரின் கழிவுநீர், நாரை குளத்தில் நேரடியாக கலக்கிறது.இதனால், நாரை குளம் சீரழிந்துள்ளது. பழமையான இக்கோவில் குளம், கழிவுநீரால் சீரழிந்து கிடப்பது பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நகராட்சி நிர்வாகம், கழிவுநீரை முறையாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி