உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / துர்க்கையம்மன் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு

துர்க்கையம்மன் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு

திருத்தணி, சிவ விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் நவராத்திரி விழா நிறைவடைந்தது. திருத்தணி கன்னிகாபுரம் ரோட்டில் உள்ள ஸ்ரீ சிவவிஷ்ணு துர்க்கையம்மன் மற்றும் ஸ்ரீ வம்ச வராஹியம்மன் கோவிலில், நவராத்திரி விழா, கடந்த 22ம் தேதி மலையனுார் அம்மன் அலங்காரத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் சரஸ்வதிதேவி அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு தாய்வீட்டு வரிசை, மதியம் 12:00 மணிக்கு பூங்கரகம் ஊர்வலம், மதியம் 1:00 மணிக்கு அன்னதானம், மாலை 5:00 மணிக்கு விளக்கு பூஜை, இரவு, 10:00 மணிக்கு அம்மன் ஊர்வலம் நடந்தன. இதில் திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பங்கேற்ற பக்தர்கள் வழிப்பட்டனர். நேற்றுடன் நவராத்திரி விழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !