செய்தி எதிரொலி தேசிய நெடுஞ்சாலையோரம் மண் அகற்றும் பணி தீவிரம்
திருமழிசை, சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நெடுஞ்சாலையில் உள்ள மீடியன் மற்றும் இணைப்பு சாலையில் உள்ள மீடியன் ஆகிய பகுதிகளில் வண்டல் மண் குவிந்துள்ளது.குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனங்களுக்கு வழிவிடும்போது மண் திட்டுக்களால் விபத்தில் சிக்கி வருவதாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் குவிந்துள்ள வண்டல் மண் அகற்றும் பணியில், தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இது, வாகன ஓட்டிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.